தஞ்சாவூர், மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான்  மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாலை 5.19 மணிக்கு பிரவேசிக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நவக்கிரக குரு பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வசிஸ்டேஸ்வருக்கும் – அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு பட்டு வஸ்திரம், நவதானியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு யாகசாலை செய்யப்பபட்டன. முன்னதாக குரு பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புனித நீர் கடம் புறப்பாடு நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குரு பகவானுக்கு சரியாக 5.19 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை கோவிலில் வரும் 6-ந்தேதி அன்று ஏகதின லட்சார்ச்சனையும்.  7, 8 ஆம் தேதிகளில் பரிகாரஹோமமும் நடைபெறுகிறது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here