கும்பகோணம், ஏப். 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக வாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

கும்பகோணம் அருகே நாகரசம்பேட்டையில் பிரசித்தி பெற்ற அழகு நாச்சியம்மன் கோயில் 4டன் எடையுள்ள தூக்கு தேரை 15 நாட்கள் விரதமிருந்து 300 பேர்கள் தோளில் சுமந்து 6 கிலோ மீட்டர் தூரம் வீதிகளிலும், விளைநிலங்களிலும் தூக்கிச் சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது.

மேலும் அக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை தூக்குதேர் பெரும் விழா 10 நாள்கள் வெகுவிமரிசியாக நடைபெறும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

அதனை அடுத்து நாள்தோறும் ஸ்ரீகாயத்திரி அம்மன் அலங்காரம், வைஷ்ணவ அலங்காரம், பார்வதி அலுங்காரம் மகஷ்ன அலங்காரம் என நாள்தோறும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு மாலை சக்கரம் இல்லாத அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அழகு நாச்சியம்மன் எழுந்தருளினார்.

4டன் எடை கொண்ட அந்த தூக்கு தேரை 15 நாட்கள் விரதமிருந்து வந்த 300 பேர்கள் தோளில் சுமந்து கீழகாட்டு இருப்பு, கீழவிசலூர், நாகரசம்பேட்டை ஆகிய பகுதிகளின் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வீதிகளிலும், விளைநிலங்களிலும் கடந்து சென்றது. தூக்கு தேர் திருவிழாவினைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.

மேலும் வெகுச்சிற்ப்பாக நடைப்பெற்ற அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அவ்வூர் கிராமவாசிகள் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வெச்சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here