மயிலாடுதுறை, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, நக்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை மகா காளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி,தினமும் இரவு மகா காளியம்மன் வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தது. இன்று ஸ்ரீகண்டபுரம் குளத்துக்கரையில் இருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் அலகு காவடிகள் புறப்பட்டு வீதி உலா வந்து, கோவிலை வந்து அடைந்தது.
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி சக்தி கரகம் அலகு காவடிகள் இறங்கி, தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை மாகாளியம்மனுக்கு செலுத்தினர் தொடர்ந்து தில்லை மகா காளிக்கு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதில் 1000 க்கு மேற்ப்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.




















