அத்திப்பட்டு, ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்பேரணிக்கு ஊராட்சி மன்ற துணை தலைவரும், ஊராட்சி திமுக செயலாளருமான எம்.டி.ஜி கதிர்வேல் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி சுகந்திவடிவேல், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் பேரணிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார், அத்திப்பட்டு பஜார் பகுதியில் துவங்கி ரயில்வே சாலை வழியாக வளம் வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அப் பிரமாண்ட பேரணியில் இந்தியா கூட்டணி கட்சியினை சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here