மீஞ்சூர், ஏப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..

திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதன்படி நேற்று செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்திரவின் பேரில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜாராபர்ட் ஆகியோரின் மேற்பார்வையில் மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ், குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் மீஞ்சூர், அரியன்வாயல், பஜார் வீதி, காட்டூர் செல்லும் சாலை தேரடி தெரு என முக்கிய சாலைகளிலும் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  கொடி அணிவகுப்பு நடப்பெற்றது.

மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் நடைப்பெறவுள்ள தேர்தல் அமைதியாகவும், மேலும் பாதுகாப்புடனும் நடைப்பெறுவதை உறுதிப் படுத்திடும் வகையிலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு சாவடிக்கு வந்து 100 சதவீதம் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றிடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் இவ்வித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேர்தல் வாக்குப் பதிவின் போது சட்ட விரோத செயல்களில் ஈடுபட  நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here