கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா இன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள், கதிராமங்கலம், சூரியனார் கோவில், துகிழி, கஞ்சனூர், திருமங்கலக்குடி, சிற்றிடையநல்லூர், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது மகாராஜபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வேட்பாளரின் பிரச்சார வாகனத்தின் முன்னாள் சென்ற எம்பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் வாகனத்தினை நிறுத்தி பெண்கள் பயணிகள் பேருந்து நிழற்குடை கேட்டு மூன்று ஆண்டுகளாக போராடி வருவதாகவும், கொளுத்தும் வெயிலில் பேருந்துக்காக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. மயங்கி கீழே விழும் சூழல் தொடர்ந்து வருகிறது என வேதனையுடன் என தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் மைக்கைக் கொடுத்து உங்கள் கோரிக்கைகளை அமைதியாக தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதில் ஒரு பெண்மனி தனது குறைகளை எடுத்துரைத்தார். அதனைக் கேட்டறிந்த எம்.பி ராமலிங்கம் ஜூலை மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மூலம் புதிய பேருந்து நிழற்குடை கட்டித் தரப்படும் எனக் கூறி விட்டு வாகனத்தை போ போ என்றபடி ஆணையிட வாகனம் அங்கிருந்து கடந்து சென்றது.
அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த வேட்பாளரிடம் அதேக் கோரிக்கையை வைத்த பெண்களிடம் கண்டிப்பாக செய்து வருவதாக தெரிவித்து அவர்களுக்கு இன்முகத்துடன் கை குலுக்கி அவர்களை கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தெரிவித்தார் அவர்களும் பதிலுக்கு தங்கள் கையை உயர்த்திக் காட்டி கை சின்னத்திற்கு வாக்களிப்பதாக அவருக்கு பதிலளித்தனர்.




















