காஞ்சிபுரம், ஏப். 05-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுடன் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு நேரில் வந்து ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ரயில் நிலைய வாசலில் நின்ற அதிமுக நிர்வாகிகள் ரயிலில் பயணம் செய்ய வந்த அரசு ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்களை  வரவேற்று அனைவரிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக மகளிர் அணியினர் ரயிலில் பயணம் செய்ய வந்த பெண்களுக்கு பூச்செண்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here