பட்டுக்கோட்டை, ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வருவாய்த்துறை அலுவலர்களால் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடந்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டிகள் நடந்தது. அக் கோலப்போட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் அதிகளவில் கலந்து கொண்டு கோலங்களை போட்டு அசத்தினர்.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த இந்த கோலப் போட்டிகளில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. என் வாக்கு என் உரிமை, காசு பணம் வாங்காமல் கண்ணியமாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, நேர்மையான ஓட்டு வலிமையான இந்தியா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களை கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவ்விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here