கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.
மேலமு இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும், இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இத்தகு பெருமைகளுக்கு எல்லாம் உரிய தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று உற்சவர் பெருமாள்;, பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்து வந்தனர்.
தொடர்ந்து புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் 12ம் நாளான வருகிற ஏப்ரல் 07ம் தேதி வெள்ளிக்கிழமை மூலவர் சன்னதியில் நண்பகல் அன்னப்பெரும்படையலும் மாலை புஷ்பயாகமும், நடைபெற்று விடையாற்றி திருவீதியுலாவுடன் இவ்வாண்டிற்காண பங்குனி பிரமோற்சவம் பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.






















