தஞ்சாவூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாபநாசம் சட்டமன்ற தொகுதி, தஞ்சை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் பாளையம் அருள்மொழிபேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக தப்பாட்ட இசையுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்ல வேட்பாளர் சுதா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்த வாகனத்தில் நின்றவாறு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்றனர்.

பிரச்சாரத்திற்கு இடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர். அன்பில் மகேஷ் கச்சத்தீவு விவகாரத்தை தற்போது விவாத பொருளாக பாஜகவினர் கொண்டு செல்ல பார்க்கிறார்கள்.

உண்மை என்ன என்று அவர்கள் பார்க்கவில்லை தமிழ்நாடு மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் எதையும் விட்டுக் கொடுத்தது கிடையாது.

பத்து வருடங்களாக ஆட்சி செய்கின்ற பாஜக கச்சத்தீவை மீட்டு  கொண்டு வர வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர்கள் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது.

இப்பொழுது மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களை தாக்குவது என பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. இலங்கை சென்ற போது இந்த பிரச்சனை குறித்து பிரதமர் பேசி இருக்கலாமே எனவும் அப்போது வினாவினார்..

மேலும் தேர்தல் வரும் பொழுது மட்டும்தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரிகிறது மக்களும் மீனவர்களும் இவர்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த அரசியல் வேஷம் தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here