புதுச்சேரி, ஏப். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி ஊசுடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர் நமச்சிவாயம் துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து வாக்குகளை சேகரித்தார் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,  கல்வி மற்றும் மருத்துவத்தில் புதுச்சேரி மாநிலம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார் மேலும் மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறவும், வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பது சுயநலமாக இருந்தாலும் புதுச்சேரி மாநில வளர்ச்சி மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றார்.

எனவே பாஜக வேட்பாளரை வெற்றிப் பெற செய்தால் அவர் மத்திய அமைச்சராகவும்  வர வாய்ப்புள்ளதாகவும் அப்போது ரங்கசாமி தனது நம்பிக்கையை தெரிவித்து பரப்பரை நிகழ்த்தினார்.

இதனிடையே பிரச்சாரத்தில் கலந்துக் கொண்ட இளைஞர் ஒருவர் தலையில் தாமரை சின்னம் மற்றும் பிஜெபி என வித்தியாசமான முறையில் சிகை அலங்காரம் செய்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here