மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகேவுள்ள நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அவ்வாலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடைபெற்றது
அதனை முன்னிட்டு விரதமிருந்த திரளான பக்தர்கள் சிவன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பாலசுப்பிரமணிய சுவாமியை வழிப்பட்டனர்.