கும்பகோணம், மார்ச். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள்.

கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். மேலும் அக்கைதிகள் தங்கள் சிறை வாழ்க்கையை பயனுள்ள விதத்தில் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் எண்ண ஓட்டத்தை சீர்படுத்தும் விதமாகவும் மேலும் கைதிகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் விவேகானந்தன், தலைமையில் கிளை சிறையில் உள்ள கிளை சிறை கண்காணிப்பாளர் பாலாஜியிடம், மனிதன் எப்படி வாழ வேண்டும், மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய நூல்கள், சிறுகதை மற்றும் கவிதை தொகுப்புகள் அடங்கிய நாவல்கள், விவசாயம் பற்றிய நூல்கள், பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எழுதிய நூல்கள் மேலும் மனிதர்களை பக்குவப்படுத்துக்கூடிய நூல்கள் என சுமார் ரூ.15,000 மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கினார்கள்.

அந் நிகழ்வின் போது, வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ரஜினி, தொழிற்சங்க தலைவர் ஆரோக்கியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் அச் சங்கத் தலைவருடன் உடனிருந்த நூல்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here