திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா வெகு விமர்சனம் நடைபெற்றது. அதில் காலை முதலே அம்பாள் வீதி உலாவில் அபிஷேக கட்டளை தெரு, வடபாதி ஆற்றங்கரை தெரு, அரசலடி தெரு, அரசலடி புதுகுளத்தெரு. காசு கடை தெரு. பழை பபேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முள்ளாச்சி அம்மன் தேளி குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் குளத்தின் நான்கு புறமும் அம்மன் மூன்று முறை வலம் வந்து திரளாக அமர்ந்தும் நின்றும் கண்டுகளித்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் சுற்று முற்றுப் பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். மேலும் அம்மனை உளமுருகி வேண்டி வணங்கினார்கள்.






















