தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி, 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதனை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் கழற்றப்பட்டன.
மேலும். மாநகராட்சி அலுவலக கல்வெட்டுகளில் உள்ள பெயர்கள், இ.சேவை மையத்தில் அச்சிடப்பட்டு இருந்த மேயர், முதல்வர் புகைப்படங்கள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டன. மேயர். துணை மேயர் பெயர் பலகைகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். மேயர், துணை மேயர் அறைகள் பூட்டப்பட்டன. இருவரது கார் சாவிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.






















