மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் மேலும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவிற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.மஞ்சுளா முன்னிலை வகித்தார். விழாவில் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி..மகாபாரதி. அப்பள்ளியில் படிக்கும், மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ.மாணவிகளை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து அவர். இப்பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களாகிய நீங்கள் தினசரி செய்தி தாள்களை படித்து பொதுஅறிவு பெற்று போட்டி தேர்வுகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும், அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் ‘ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்பு சிறந்த தலைமை ஆசிரியருக்கான தமிழக அரசின் அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியை மா.மஞ்சுளாவை பாராட்டி கெளரவித்தார். மேலும், சிறந்த ஆளுமைக்கான விருதை மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்திக்கு வழங்கி கெளரவபடுத்தினார்.
அச்சிறப்பு மிகுந்த அவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு மேலும் அவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர்.




















