திருவள்ளூர், மார்ச்.14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் அருகே ஏடி.எம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை வங்கி உதவி மேலாளர் தடுத்துள்ளார் அப்போது அவரை தாக்கியதைத் தொடர்ந்து அப்பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை  சர்வீஸ் செய்து கொண்டிருந்தனர். அப்போது அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார்.

அதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும் பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதைப் மீறியும் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப்  வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அடித்து தாக்கியதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

அதுக்குறித்து தகவலறிந்த மனவள நகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here