தஞ்சை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை தம்பட்டம் வாசர்களோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
அதுக் குறித்த விவரங்களை விவசாயி முருகேசன் சொல்ல நமது செய்தியாளர் சாரு கட்டுரையாக வடிவமைத்துள்ளார்
ஆடு, கோழி விவசாயம், மீன் வளர்ப்பு, மீன் உற்பத்தி மூலம் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக விவசாயி தெரிவித்தார். மேலும் அவர். கட்லா, ரோகு, மிருகாள் மீன்களும், புல் கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை வளர்த்து வருவதாக அப்போது தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டை பொருத்தவரையில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் மீன் வளர்க்கலாம். என்ற அவர், பொதுவாக மீன் வளர்க்க நீரின் தன்மை 7.5 ph இருக்க வேண்டும். எனவும், அதே போல் மீன் வளர்ப்பில் மண் வளத்தையும் நீரையும் கெடுக்காத வகையில் குளத்தை பராமரிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றென அவர் தெரிவித்தார்.
மேலும் அக்குளத்தினை சூரிய ஒளி படும் வகையில் கிழக்கு மேற்கில் குளத்தை வெட்ட வேண்டும் எனவும், பின்பு அதில் மீன் குஞ்சுகள் வெளியே வராத வகையில் குளத்தினை சுற்றி கரைகளை அமைத்து. அதன் பின்னர் மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்க்கும் படி அறிவுறுத்தினார்.
மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் தீவனம் கொடுப்பது அவசியம். எனவும் இரண்டு இன்ச் மீன் குஞ்சுகளை வளர்த்தால் அறுவடை செய்ய 10 மாதங்கள் ஆகும். எனவும் இல்லை விரைவில் அறுவடை செய்ய வேண்டும் என்றால் 100 கிராம் குஞ்சுகளை குளத்தில் விட்டு ஒரு சில மாதங்களில் அறுவடையை தொடங்கலாம். என்றார்.
ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் குஞ்சுகள் வரை வளர்க்கலாம் எனவும், ஒரு டன் மீனை பிடிக்க ஒன்றரை டன் அளவிலான தீவனம் தேவைப்படும் என்றும் அதே சமயத்தில் நீரையும் மண்ணையும் சுத்தமாக பராமரித்து வந்தால் தீவன செலவு வெகுவாக குறையும் என்றார்.
அதுபோல் நீல அமிர்தம் பஞ்சகாவியா தெளிக்க வேண்டும் எனவும் மேலும் குளத்தில் ப்ரொபையாடிக்ஸ் எனப்படும் மருந்தை பயன்படுத்த வேண்டும் அதனைப் பயன்படுத்துவதால், குளத்தில் உள்ள கழிவுகளை மீன்கள் உண்ணாத வகையில் அதனை அளித்து விட்டு முழுமையாக நல்ல தீவனங்களை உண்ணவும் ஆக்சிஜன் கிடைக்கவும் வழி வகை செய்யும் என்றார்.
நாம் வளர்க்கக்கூடிய ஒவ்வொரு வகையான மீனை மாதம் ஒரு முறையாவது பிடித்து அதை எடை போட்டுப் பார்த்து அதற்கு தேவையான தீவனத்தை கொடுக்க வேண்டும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் குறைவான எடை இருந்தால் 2% உடல் எடை அதிகரிக்க கூடிய தீவனத்தை தர வேண்டும் என குறிப்பிட்டார்.
மீன் உற்பத்தி மற்றும் வளர்ப்பின் போது எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் ..
கண்ட தீவனங்களை அதிக அளவில் குளத்தில் கொட்டினால் மண்ணும் நீரும் மிகவும் கெட்டவிடும் சூழல் எழும் எனவும், அதனால் மீன் குஞ்சுகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்றார். முக்கியமாக மீன் வளர்ப்பை பொறுத்தவரையில் 80 சதவீத உணவு இயற்கையாகவே கிடைத்து விடும் எனவும் மேலும் நாம் 20% உணவை மட்டுமே அளிக்க வேண்டும் என்றார்.
அதிலும் 2% சதவீத உணவு உடல் எடையை அதிகரிக்கும் மேல் உணவாகும் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி மீன் வளர்ப்பில் பொருத்த வரையில் சில முறை லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. விவசாயம் போல தான் மீன் வளர்ப்பும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
யாராவது செய்ய வேண்டும் என்று எண்ணினால் அதை குறைந்த அளவில் முதலில் செய்து அதன் பின்னர் படிப்படியாக ஒரு ஏக்கரில் குளம் வெட்டி அதை சுற்றிலும் தென்னை மரத்தை நட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீன் வளர்ப்பில் கிடைக்கும் வருமானத்தை போல தென்னையிலும் வருமானம் பார்க்கலாம் என்றவாறு மீன் குஞ்சு வளர்ப்பில் ஈடுப்பட நினைப்பவர்களுக்கு அவரின் 26 ஆண்டு கால அனுபவத்தை சூரக்கோட்டை பகுதியில் வாழும் முன்னோடி விவசாயி முருகேசன் பகிர்ந்துக் கொண்டார்.



















