தஞ்சாவூர், மார்ச். 11 –

திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட்   ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில்  7 மாணவர்கள்  நோபெல் உலக சாதனை படைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச் சேர்த்த வெங்கடேஷ் – ஆஷா தம்பதியரின் 4 வயது மகள் ஜோஷ்மிதா. இவர் 1 நிமிடம் 9 நொடியில்  வேகமாக 30 குட்டிக்கரணம் அடித்து நோபல் உலகசாதைனை படைத்தார்.

அதுப்போன்று பட்டுக்கோட்டைச் சேர்த்த சுப்புரத்தினம் – வனிதா தம்பதியரின்   4 வயது மகன் தர்கிஷ், இவர் 14 நிமிடம் 16 வினாடியில், தனது இளம் வயதில் 1 முதல் 50 எண்ணங்களை கொண்ட படம் வரைதல், 50 திருக்குறள் மற்றும் 50 சுருக்கங்கள் சொல்லி உலக சாதனை படைத்தார்.

மேலும் பட்டுக்கோட்டைச் சேர்த்த பாலச்சந்திரன் – மீனாட்சி தம்பதியரின் 5 வயது மகள் சம்ரிதா ஸ்ரீஜா. இவர் 1 நிமிடம் 11வினாடியில் அட்டவணையின் 118 கூறுகளை சொல்லி உலக சாதனை படைத்தார்.

அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டையைச் சேர்த்த பழனிவேல்ராஜ் – பிரியதர்ஷினி தம்பதியரின் 5 வயது மகன் அக்ஷரன் இவர் 1 நிமிடம்  22 வினாடியில்,  கணிதத்தில் உள்ள சின்னங்கள் மற்றும் சூத்திரங்களைச் சொல்லி உலக சாதனை படைத்தார்.

அடுத்து வந்த பட்டுக்கோட்டையைச் சேர்த்த செந்தில்குமார் – நித்தியா தம்பதியரின் 5 வயது மகள் S.பிரதிஷ்டா. இவர் 19 நிமிடம் 56 வினாடியில்,  தமிழ்நாட்டில்  உள்ள 38 மாவட்டங்களின் சிறப்புகளைச் சொல்லி கொண்டே படம் வரைந்து உலக சாதனை படைத்தார்.

சாதனை வரிசையில் பட்டுக்கோட்டையைச் சேர்த்த விஜய்ஆனந்த் – விஜி தம்பதியரின் 5 வயது மகள் சேஷ்மிதா.14 நிமிடம் 14 வினாடியில்,  இவர் 1000 ஆங்கில வார்த்தையை போனிக்ஸ் ஒலியில் சொல்லி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த அட்ஷயகுமார் – ராதிகா தம்பதியரின் 5 வயது மகன் சாய்மித்ரன். இவர் 2.30 மணி நேரத்தில் வெஸ்டர்ன் நடனத்தில் பல்வேறு பொருட்களை வைத்து நடனம் ஆடி உலக சாதனைப் படைத்தார்.

இச்சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சற்குணம், பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர்  சண்முகப்ரியா. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன், தஞ்சை  மருத்துவர்  தாமரைச் செல்வி,  பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி துணை தலைவர்இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த உலக சாதனையை நேரில் ஆய்வு செய்து பதிவு செய்ய  நோபல் நிறுவனத்தில் இருந்து டாக்டர் அரவிந்த்   முன்னிலையில் நடத்தி நோபல் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here