தஞ்சாவூர் மாவட்டம், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், புதிதாக உருவாகிவுள்ள திருவோணம் தாலுகாவில் பட்டுக்கோட்டை தாலூகவிற்கு உட்பட்ட 4 கிராமங்களை இப்புதிய தாலூவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி மாற்றுத் திறனாளிகள் உட்பட சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டை தாலுகாவுடன் இணைக்கவில்லை என்றால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை, கொள்ளைக்காடு, உக்கடைபீமாநகர் மற்றும் இடையாத்தி வடக்கு இடையாத்தி தெற்கு ஆகிய நான்கு கிராம பகுதிகள் பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக துவங்கப்பட்ட திருவோணம் தாலுகாவில் இணைப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதுக் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் திருவோணம் தாலுகாவுடன் இணைப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு கடைத்தெரு பகுதியில் கடைகளில் கருப்பு கொடி கட்டி 4 கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதுக் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் கூறும் போது பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தாலுகா பகுதியில் எங்கள் கிராம பகுதிகள் இருந்ததால் எங்களுக்கு பட்டுக்கோட்டைக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதிகள் இருந்ததாகவும் ஆனால் தற்போது திருவோணம் தாலுகாவுடன் இணைக்கப்பட்டதற்கு தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பேருந்து வசதிகள் இல்லாமல் எங்கள் பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் தெரிவித்தார்.
அதனால் அப்பிரச்சினைக் குறித்து ஏற்கனவே நாங்கள் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மேலும் அவர்களின் அலண்டஃசியப் போக்கினைக் கண்டித்து நாங்கள் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மேலும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்துவிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என மிகுந்த சீற்றத்துடன் தெரிவித்தார்.


















