தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில் பங்கேற்று அருள்மிகு ஸ்ரீஜம்புகேஸ்வரரை வழிபபட்டனர்.
தஞ்சை மாவட்டம், 18 கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்கள் காசவளநாடு என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானதாகும். இந்நிலையில் அக்கோவில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவினை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை காலப் பூஜை துவங்கி நடைப்பெற்றது. இன்று நான்காம கால யாகசாலை பூஜை பூரணா ஹூதியுடன் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கலசம் புறப்பாடு சிவாச்சாரியார்கள் புனித நீர் கடத்தை சுமந்து வர வழி நெடுக பூக்கள் தூவி மக்கள் வரவேற்றனர். அப்போது கொம்பு இசை. சிவகனங்கள், மங்கள வாத்யங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ராஜகோபுரம், மூலவர் சன்னதி, பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் சிவனே போற்றி என பக்தி முழக்கமிட்டனர். மேலும் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அக்கும்பாபிஷேகத்தை 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் வழிப்பட்டனர்.



















