மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தருமபுரம் ஆதினம் ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வினோத், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகிய 3 பேர் இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று மீண்டும் தள்ளுபடி செய்தது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் மடாதிபதியின் உதவியாளர் செந்தில்,
பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்து 28 ஆம் தேதி ஆடுதுறை வினோத் திருவெண்காடு ரவுடி விக்னேஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ், ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மேலும் அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அகோரத்தை காவல்துறையினர் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள வினோத் ஸ்ரீனிவாஸ் மற்றும் குடியரசு ஆகிய மூன்று பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் அவர்கள் ஜாமீன் மனுவினை நீதிபதி ராஜவேலு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அதில் ஒரு குற்றவாளியான விக்னேஷ் என்பவர் ஜாமின் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிலையில் ..
ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆதினத்தின் உதவியாளர் செந்தில் அலகாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மடாதிபதிவுடன் பங்கேற்ற போட்டோ வைரலாகி வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் செந்திலின் மிரட்டல் பிடியில் சிக்கி ஆதினம் தவிக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி பொதுமக்கள் தரப்பில் பரபரப்பாக பேசப் பட்டு வருவதாக தெரிய வருகிறது.
தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் ஆபாச வீடியோ வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கின் இரண்டாவது குற்றவாளியான மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவர் காசியில் தங்கி உள்ள மடாதிபதி உடன் அங்குள்ள கட்டளை மடத்தில் தங்கி இருப்பதும் மேலும் நேற்று அலகாபாத்தில் தருமபுர ஆதீனம் மடாதிபதி சாரட் வண்டியில் சென்ற போது செந்தில் ஊர்வலத்தில் பங்கேற்று இருப்பதும் புகைப்படங்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதீன மரபுப்படி ஆதீனத்துக்கு கீழ் உள்ள கட்டளை தம்புரான் சாமிகள் யாராவது குற்றம் செய்திருந்தால் அவர்களது காவியை மீண்டும் வாங்கிக் கொண்டு வெள்ளை வஸ்திரம் அளித்து மடத்தை விட்டு வெளியேற்றுவது வழக்கம். ஆதீனத்தின் உதவியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ள செந்தில் மிகவும் கடை நிலை ஊழியராக கருதப்படுபவர் இந்நிலையில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வரும் நிலையில், ஆதீனத்தின் அருகிலேயே வலம் வரும் உதவியாளர் செந்திலை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்பதும், ஆதினத்தின் மரபுப் படி ஏன் மடத்தை விட்டு செந்திலை வெளியேற்றவில்லை என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
உண்மையில் ஆதீனம் செந்தில் பிடியில் சிக்கித் தவிக்கிறாரா !? அதனை ஏன் காவல்துறை கண்டுகொள்ளவில்லை உடனடியாக செந்திலை கைது செய்தும், மடத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது போல் மடாதிபதிக்கும் துப்பாக்கி எந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மடத்தின் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















