திருவள்ளூர், மார்ச், 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் அப்பகுதியில் நடைப் பெற்ற இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற  வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளாக முதல் பரிசு 15000, இரண்டாம் பரிசு 8000, மூன்றாம் பரிசு 5000, நான்காம் பரிசு 3000 ஆகிய பரிசு தொகையினை மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. விரமணா வழங்கினார்.

மேலும் இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஒன்றிய நிர்வாகிகள் விஜயலட்சுமி ராமமூர்த்தி, மோகன் அரிச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமித் பாஷா கிளை கழக செயலாளர் முஸ்லிம் பாளையம் காதர் பாஷா மூத்த நிர்வாகிகள் பக்கீர் , அப்பாஸ் இளைஞர் அணி நிர்வாகிகள் நூர் முகமது ,ரசித் மற்றும் கிளை கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here