திருவாரூர், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான பாகநிலை முகவர்கள் – 2 ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் அரங்கில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் தலைமையிலும், தொகுதியின் பொறுப்பாளர் பழஞ்சையூர் செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் அக் கூட்டத்தில் சென்னையில் நாளை நடைபெறும் கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் மாவட்டத்திலிருந்து அதிகப் படியான எண்ணிக்கையில் கலந்து கொள்வது எனவும், வரும் ஒன்றாம் தேதி திமுகத் தலைவர் முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள் குறித்த பிரதியை வீடு வீடாக மாலை நேரத்தில் பொதுமக்களிடம் வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றினார்கள்.

சிறப்புமிகு நடைப்பெற்ற அக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் பாக நிலை முகவர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அக்கூட்டத்தினை மேலும் சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here