பாண்டிச்சேரி, பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

பாண்டிச்சேரி மாநிலம், புதுச்சேரி பழைய துறை முகத்தில் ரூ.2.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுப் போக்கு மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திறந்து வைத்தார்.

புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை மூலம் பழைய துறைமுக வளாகத்தில் ரூ.2.7 கோடி மதிப்பில் கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுபோக்கு மையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

அவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையங்களைத் திறந்து வைத்தார். மேலும் அவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,  பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண்  அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுபோக்கு மையத்தை பார்வையிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here