திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க பட்டு உள்ளது..
இதனைத் தொடர்ந்து நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இதனால் பழைய பேருந்து நிலையத்தின் வழியாக திருவாரூர் நகருக்குள் வரும் சாலை முழுவதும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம்….பனகல் சாலை வழியாக தேரோடும் வீதிகள் மற்றும் நகர் பகுதி வழியாக சென்னை, மயிலாடுதுறை, சிதம்பரம், நாகூர், நன்னிலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளின் வழித்தடங்களை மாற்றி அமைக்கப்பட்டு கும்பகோணம் மார்க்கத்தில்.. வடகண்டம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது..
இதனால் வழக்கமாக உள்ள பேருந்து கட்டணங்கள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி.. 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக பயணிகளிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது..
முறையான அறிவிப்புகள் இன்றி பேருந்து கட்டணங்களை அரசு போக்குவரத்து நிறுவனம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.. என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : சண்முகசுந்தரம்,
சமூக செயற்பாட்டாளர்.