கும்மிடிப்பூண்டி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை எழுப்பியவாறு ஏரியத் தொடங்கியது அக்கரும்புகை சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாய் காட்சி அளித்தது.
மேலும் அத்தொழிற்சாலையில் பழைய டயர்களை வாங்கி அந்த டயர்களை மறு சுழற்சி செய்து அதில் இருந்து ஆயில் மற்றும் டயர் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது.
அதுப் போன்று இன்றும் அப்பணி அத்தொழிற்சாலையில் நடைப்பெற்று வந்துள்ளது. அப்போது, அங்குள்ள ப்ராசசிங் யூனிட் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் பரவிவுள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்களின் அரைமணி நேரப்போராட்டத்திற்குப் பின்பு அத்தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்தில் இருந்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அத் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதென காவல்துறையினரின் விசாரணை தொடங்கிவுள்ள நிலையில், அதுக்கிற்று அவர்கள் தெரிவிக்கும் போது அதிகப்படியான இயந்திர வெப்பத்தினால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா ? மேலும் வேறுக் காரணங்கள் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொள்ளப் பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைக்குப் பின்புதான் உறுதியான தகவல் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.
மேலும் அத் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கனரக இயந்திரங்களும் எரிந்து சேதமாகியுள்ளதாக சிப்காட் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிய வருகிறது. மேலும் அவ்விபத்தில் உயிர் சேதமோ, உடல் பாதிப்போ எதுவும் இல்லையென தெரிய வருகிறது. தொடர்ந்து நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை நடைப் பெற்று வருகிறது.




















