திருவள்ளூர், பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

நடிகர் விஜய் சமிபத்தில் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதியக் கட்சியினை தொடங்கி அதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்துள்ளார். அதனை வரவேற்றும் அதற்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் அக்கட்சியின் திருவள்ளூர் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

மேலும் அப்போது அவர்கள் விஜய்  2026 இல் தமிழக முதலமைச்சராக வருவார் நல்லாட்சி தருவார் என வழக்கறிஞர்கள் முழக்கமிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையிலும் மற்றும் வழக்கறிஞர் சார்பிலும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here