சென்னை, பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் து. ராஜகுமார் …

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஜனநாயக புலிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கருத்தியல் கூட்டம் அக்கட்சியின் மத்திய  மாவட்டப் பொறுப்பாளர் ரெயின்போ ரவி தலைமையில் இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனரும் மற்றும் தலைவருமான நா.மு.தங்கபாஸ்கரன் முன்னிலையில் புதியப் பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்றது.

மேலும் வழக்கறிஞரும் மாநிலத் தலைவருமான இரா.தாயுமானவர் அந்நிகழ்விற்கு முன்ணிலை வகித்தார். அதில் ச.சரவணக்குமார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் R.M.முருகன், தகவல் தொழில்நுட்பம் பிரிவு (IT) கொளத்தூர் த.டேவிட் கிங் கார்த்தி, மகளிர் அணி தலைவர் கல்வியாளர் பி.கே.பிரியலதா உள்ளிட்டவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கருத்தியல் பரிமாற்றம் நிகழ்வு கூடுகை நடைபெற்றது. இச்சிறப்பான கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும். சென்னை ஐஐடியில் ஆதிதிராவிடர் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை செய்து வரும் வன்முறைகளை வன்மையாக கண்டிக்கும் தீர்மானம் மற்றும் தமிழக ஆளுநரின் சர்வாதிகார போக்கை கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here