நன்னிலம், பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு தேவையான கதிர் அறுக்கும் அரிவாள், புல் அறுக்கும் அரிவாள் மற்றும் மரக்கிளை, இலைகளை வெட்டக்கூடிய சிறிய மற்றும் பெரிய அரிவாள்கள், மண்வெட்டி, கோடரி போன்றவற்றை விவசாயிகளுக்கு செய்து தருகின்றனர்.
மேலும் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், குறைவான விலையிலும் அவர்கள் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து தருவதால் அவர்களின் தொழில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.



















