மீஞ்சூர், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் நடைப்பெற்ற மக்களின் அவலநிலைகள் குறித்து பொதுமக்களிடையே ஞாபகப் படுத்தல் மற்றும் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் தெரு முனைப் பிரச்சாரங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அக் கட்சினருக்கு அறிவுறுத்தியதின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் நகரத்தில் நகரத் தலைவர் அரவிந்தன் தலைமைமயில் நடைப்பெற்றது.
மேலும் மீஞ்சூர் வட்டாரத் தலைவர்கள் அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவை ஜெயசீலன், திருப்பாலைவனம் வினோத், குணசேகரன், பொன்னேரி நகரத் தலைவர் ஜெய்சங்கர், ஆரணி சுகுமாரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
அத்தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர், மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசு, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சிறப்புரை நிகழ்த்திய எம்.எல்.ஏ. மத்திய பாஜக அரசு தமிழக மக்களுக்கு பேரிடர் காலங்களிலும் உரிய நிவாரண தொகை வழங்கவில்லை எனவும், மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி மதவாதத்தை தூண்டுகிறது எனவும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினை உயர்த்தி ஏழை எளியோர்களின் வாழ்வாதாரத்தை வஞ்சித்து கடந்த பத்தாண்டு காலமாக பாஜக ஆட்சி நடத்துவதாக தெரிவித்தார். மேலும் திராவிட கட்சிகள் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது என அப்போது ஆவேசமாக சூனுரைத்தார்.
மேலும் அக்கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மீஞ்சூர் பிரபு, முகமதுதாரிக், முகமது அல்தாப், நந்தியம் சக்கரவர்த்தி, மீஞ்சூர் சுகுமாரன், மீஞ்சூர் சித்திக் பாஷா, ஆவூர் பரசுராமன், மீஞ்சூர் காமராஜ் உள்ளிட்டவர்களும் மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். நிறைவில் சம்பத்குமார் நன்றி தெரிவித்து, நன்றியுரை நிகழ்த்தினார்





















