மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி அலமேலு அம்மாள் அறக்கட்டளை சார்பாக நடத்தி வருகிறார்.
மேலும் அவர் ஆண்டு தோறும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று மீஞ்சூர் விவேகானந்தா தனியார் பள்ளியில் என்னால் முடியும் எனும் தன்னம்பிக்கையை மாணாக்கர்களுக்கு தரும் வகையில் திறன் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பயிற்சி அளித்தார், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி, மற்றும் மாணவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.