திருவேற்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் இருக்கும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை அப்பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவேற்காடு நகரமன்றத் தலைவர்என்.இ.கே.மூர்த்தி இந்தியத் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பிஸ்கட்களும், மற்றும் மிக்ஜா புயலில் பாதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் பிரதானம் ஏற்பாட்டில் ஐந்து கிலோ அரிசி, போர்வை, ஒரு கிலோ கோதுமை மாவு, பிஸ்கட், இனிப்புகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக அலுவலர்கள் குடியிருப்பு நலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்