திருவாரூர். சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் …
திருவராரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியில், பாரத பிரதமர் நரேந்திரமோடி, புதிய இளம் வாக்காளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அதில் அம்மாவட்டத்தில் இருந்து வந்திருந்த புதிய இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான புதிய வாக்காளர்கள் கலந்து கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி யின் காணொளி காட்சி உரையை கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்வில் புதிய இளம் வாக்காளர்களுக்கு புதிய திட்டம் குறித்தும் டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றியும் பணம் பரிமாற்றம், மை இந்தியா திட்டம் குறித்தும் விண்கலத்தில் நிறைய மாற்றங்கள் குறித்தும் மேலும் யாரும் செய்ய முடியாத ராமர் கோயில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டது குறித்த உரைகள் அதில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் செந்தில் அரசன், கல்வியாளர் பிரிவு சிவா, நெசவாளர் பிரிவு ஜோதி ராமன், இளைஞர் அணி சிவகாளிதாஸ், லோகநாயகி, வசந்த ராஜன், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் மணிமேகலை, மாவட்ட பொருளாளர் அட்சயா முருகேசன் மற்றும் ஜெகதீசன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





















