அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்டங்கள் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் மூன்று வாகன சட்டங்கள் அமலாக்கப்பட்டன. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.
குறிப்பாக, அத்திருத்த சட்டத்தில் சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் (New hit-and-run law) செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவூ இதற்கு முன்பாக உள்ளச் சட்டமான ஐபிசி 304 ஏ படி அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தற்போது 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடத்தும் ஓட்டுனர்கள் மீது தண்டனையாக ஏழு லட்சம் அபராதம் விதிப்பதற்கும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதனை எதிர்த்தும் நிரந்தரமாக அச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் அத்திப்பட்டு புது நகரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கம்பெனி முன்பு சென்னை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிப்புரியும் சார்ந்த ஓட்டுநர்கள் உதவியாளர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.