பட்டாபிராம், சனவரி. 23 –
மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக அரசின் டாஸ்மாக் மதுப்பான கடை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அக்கடை அரசின் விதிமுறைகளுக்கு மாறாக வைத்துள்ளதாக புகார் தெரிவித்து உடனடியாக அதனை அகற்ற வேண்டுமென துறைச்சார்ந்த அரசு உயர் அலுவலர்களுக்கு மனுக்கள் அளித்தனர். இருப்பினும் அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் அதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அம்மக்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்களிடமும் மனுக்களை வழங்கிவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் தங்கள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றித் தராததினால் அப்பகுதி வாழ் மக்கள் விரக்தியின் உட்சம் தொட்ட நிலையில், தங்கள் வேதனையை கடவுளாவது தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் நேற்று அயோத்தியில் நடைப்பெற்ற பாலராமன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதரபெருமாள் திருக்கோயிலில் உள்ள பெருமாளின் காலடியில் தங்களது கோரிக்கை மனுவினை வைத்து கோரிக்க முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இப்பகுதியில் உள்ள இத்திருக்கோயிலுக்கு எதிராகவே மதுப்பான கடையிருப்பதால் கோவிலுக்கு வரும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கு பெரிதும் பாதிப்புகள் மற்றும் மதுப்பிரியர்களால் போதையில் தங்களுக்கு இடையூறு எதுவும் நடந்திடுமோ எனும் அச்சத்தில் சுவாமியை வழிபட வரும் பக்தர்களின் வருகை கனிசமாக குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அரசின் விதிமுறைகளை மீறி அப்பகுதியில் துறைச்சார்ந்த அலுவலர்கள் அனுமதி அளித்திருப்பது குற்றமாகும் எனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்திருக்கோயில் 55 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததாகும் எனவும், இத்திருக்கோயிலுக்கு பட்டபிராம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெண்கள் பொது மக்கள் என ஏராளமானவர்கள் கடவுள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் மிக அருகாமையில் கோவிலின் எதிர்ப்புறமே புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடையை கொண்டு வந்துள்ளது இதனை எதிர்த்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பொதுநல சங்கம் பல்வேறு கட்சிகளை சார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மன உளைச்சலோடு அளித்த பேட்டி,,
1.ஷர்மிளா ஆவடி பட்டாபிராம் 15ஆவது வார்டு,
பெண்கள் கோவிலுக்கு வருவதற்கே அச்சமாகவும் அசிங்கமாகவும் தலைகுனிவோடு வரவேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றார். எதிரிலேயே அமைந்துள்ள மதுபான கடையில் ஆண்கள் குடித்துவிட்டு திரிவதால் பெண்கள் பள்ளி குழந்தைகள் கோவிலுக்கு வர தயக்கம் ஏற்படுகிறது தயவு செய்து மதுபான கடையை அகற்ற வேண்டும்
2.ஜெயகுமார் பட்டாபிராம் பாரதியார் நகர் குடியிருப்போர் நல சங்கம்,
திருக்கோவிலின் அருகே எதிரிலே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நல சங்கங்கள் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனுக்களை அளித்து அவர்களின் இல்லங்களிலும் சென்று அளித்து எவ்வித மாற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் வேறு வழியே இன்றி ஸ்ரீதர பெருமாள் இடமே மனுவை அளித்து வினோதமாக வழிபட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி பெருமாளயே நம்பி இருக்கிறோம். இவ்வாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி கடவுளிடமும், அரசிடமும் மனுவடிவில் முன் வைத்துள்ளனர்.