சோழன்மாளிகை, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள், திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு அவ்வூர் மக்கள் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் புதியதாக உற்சவர் வெங்கடேச பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, பிரதிஷ்டை செய்யப்பட்டு வெகு விமரிசையாக சுவமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும், நடைபெற்று அக்னி வளர்த்து பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடந்தேறியது அந்நிகழ்வினை காண ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆறுமுகம், கோவில் நிர்வாகிகள் குமார், அசோகன், மற்றும் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் கிராம வாசிகள் உள்ளிட்டவர்கள் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது.