பொன்னேரி, ஜன. 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான டாக்டர். எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி வட்டாரம் முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும் அதனைத் தொடர்ந்து, ஆண்டார்குப்பம், வேம்பாக்கம், நாலூர், வெள்ளிவாயல் சாவடி, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ,மேலும்.  அதனைப் போன்று மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1000 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார், மேலும் பள்ளிபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைகளை திறந்து வைத்து கிராம மக்களுக்கு அருசுவை உணவினை வழங்கினார்.

அந்நிகழ்வின் போது, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் பொன் ராஜா, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார்,  நகர செயலாளர்கள் பட்டாபிராமன், செல்வக்குமார், பதினைந்தாவது வட்டக் கிளைச் செயலாளர் காமராஜ், அம்மா பேரவை வட்டக்கிளை செயலாளர் ராஜேஷ், பொன்னேரி யுவராஜ், கொண்டக்கரை அமிர்தலிங்கம், கடப்பாக்கம் ராஜா, பள்ளி புரம் ரமேஷ், சங்கர், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here