கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2004-07 பி ஏ ஆங்கிலம் சிறப்புப்பாடம் எடுத்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமையில் கடந்த டிச 30 ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் முன்னாள் மாணவர்கள் இளங்கோவன், சேகர், தினகரன், சேது மாதவன், மற்றும் அக்கல்லூரியில் பயின்று தற்போது வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், அதிகாரிகளாகவும் ஆசிரியர்களாகவும், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களாகவும் உள்ள, ஏராளமான முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சரவணன், மாதவி, சிவகுமாரன், அன்பழகன், பாஸ்கரன், சங்கரநாராயணன், ராமகிருஷ்ணன், மற்றும் தற்போது உள்ள பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் அழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். பின் கல்லூரிக்கு நினைவு புகைப்படம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.






















