மீஞ்சூர், டிச. 28 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் 139 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட கோளூர் மற்றும் தேவம்பட்டு ஆகியக் கிராமங்களில் உள்ள புதிய கொடிக்கம்பங்களில் அக்கட்சி கொடியினை ஏற்றும் விழா நடைப்பெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. எஸ் .அழகிரின் ஆணையின் படியும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் கே .ஜெயக்குமார் அறிவுறுத்தலின் படியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் உத்தரவின் பேரிலும் அவ்விழா நடைப்பெற்றது.

மீஞ்சூர் மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோளூர், மற்றும் தேவபட்டு கிராமங்களில் புதியக் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் உமாபதிராஜு, மாவட்ட செயலாளர் பரசுராமன், உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர், மாவட்ட பொதுச் செயலாளர் நியமராஜ், மாவட்ட செயலாளர் தேவம்பட்டு சுரேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையாரின் திருவுருவ படத்தினை நிறுவி அப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, இரு கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இதில் மீஞ்சூர் மேற்கு வட்டார தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் பெரும்பேடு அப்புன், மண்டல பொறுப்பாளர்கள் முனிவேல், கார்த்திக், அமாவாசை, பாஸ்கர், பரந்தாமன், விஜய், உள்ளிட்டவர்களும் திரளான அக்கட்சி தொண்டர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here