திருவாரூர், டிச. 28 –
சென்னையில் இன்று மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த்து. அதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும் மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தேமுதிக கட்சியினர் ஆங்காங்கே அவரதுதிருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி எதிராக தேமுதிக கட்சியினர் சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த தேமுதிக கட்சியின் தலைவர் மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு, திருவாரூர் நகர செயலாளர் சதீஷ் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் முத்தையாவுடன் அக் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு ஊதுவத்தி ஏத்தி வைத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தொண்டர்கள் கண்ணீர் மல்க அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இந்நிகழ்ச்சியின் போது தலைவரை இழந்த அக்கட்சித் தொண்டர்கள் அழுத நிகழ்வு கல்நெஞ்சத்தையும் கரைத்திடும் வகையில் இருந்தது.






















