பழவேற்காடு, டிச. 27 –

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில் கலந்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று ஏற்பட்ட சுனாமி பேரலையால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் மாநில கடற்கரைப்பகுதியில் உள்ள மாவட்டம் மற்றும் நகரங்கள் அச் சுனாமி சீற்றத்தால் பெருந்த உயிரிழப்பு உள்ளிட்ட பொருளாதார அழிவுகளை மக்கள் சந்திக்க நேரிட்டது. அதில் இனப்பாகுப்பாடு மற்றும் வயது வேறுபாடுகள் இன்றி அச்சுனாமி சீற்றத்திற்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவு முறைகளை பறிக்கொடுத்தனர். அது மட்டுமல்லாது தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகினார்கள். என்பதை யாராலும் மறந்திட முடியாது

அக்கோரச் சம்பவம் கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அந்நாளினை அச்சுனாமி பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் அந்நாளை அனுஷ்டிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அந்நாளில் தங்கள் உறவுகளை இழ்ந்தவர்களின் நினைவாக கடற்கரைப்பகுதியில் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திடும் விதமாக கண்ணீர் பெருக மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்கள் மற்றும் மலர்மாலைகளை அவர்களது திருவுருவப் படத்திற்கு சூட்டியும் மரியாதை செலுத்துவதை தொடர்ந்து வருகின்றனர்.

அதன் ஒருப்பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதி வாழ் வைரவன் குப்பத்தினை சேர்ந்த மீனவ மக்கள் அந்நாளில் தங்கள் உறவுகள் மற்றும் உடமைகளை இழந்த அப்பகுதி மக்கள் அச்சுனாமி பெரும் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர் மல்க கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மலர்மாலை சூட்டியும் மரியாதை செலுத்தினார்கள். மேலும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது, வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர் வைரவன் குப்பம் ஞானமூர்த்தி, கிராம பொதுமக்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க தலைவர் எத்திராஜ், பொதுச் செயலாளர் மகேந்திரன், செய்தி தொடர்பாளர் முத்து உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here