கும்பகோணம், டிச.25 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் தனியார் ஆபரண மாளிகை மற்றும் பாரதிய ஜெயின் சங்கட்னா ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்றையத் தினம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமினை  லயன்ஸ் சங்க தலைவர் கண்ணன், ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இம் முகாமில், செயலாளர் அருண், பொருளாளர் முரளி, நிர்வாக அலுவலர் ராமதுரை மூத்த உறுப்பினர் காசி பாலசுப்ரமணியன் பரதன் மண்டல தலைவர் சதிஷ் மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் மருத்துவ பயனாளிகளுக்கான பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பயனடைந்தனர். மேலும் 200 மேற்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வேனில் அழைத்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here