நீடமங்கலம், டிச. 19 –

திருவாரூர்  மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது ஒரத்தூர் கிராமம். அப்பகுதியில் திருவள்ளுவர் எனும் நகர் உள்ளது. அந்நகரில் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அங்குள்ள சத்துணவு ஆயா ஒருவர் தனிமையாக இருந்தபோது இரவில் வந்த திருடர்கள் அவர் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை அறுத்து எடுத்துச் சென்றனர்.

அதுப்போன்று கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆசிரியர் தம்பதி வீட்டில் பட்ட பகலில் 17.5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதே போன்று தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி இரவு நீடாமங்கலம் அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 26 பவுனும், இரண்டரை லட்சம் ரொக்கம், அதே போன்று அன்றையத் தினத்திலேயே அருகில் உள்ள வீட்டில் 450 கிராம் வெள்ளி பொருள்கள், இருபத்தி ஐந்தாயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரண்டு போலீஸ் தனிப்படைகளை அமைத்து அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் பல நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்க்கனவே திருட்டு போன ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு டாடாசுமோ காரில் வந்த ஒரு மர்ம கும்பல் ஏற்கனவே திருட்டு போன ஆசிரியர் தம்பதியர் வீடு அருகே காரை  நிறுத்திவிட்டு இரண்டு திருடர்கள் மட்டும் கையில் உறை அணிந்தும், முகத்தில் பனிக்குல்லா அணிந்தும் கம்பி போன்ற பெரிய ஆயுதங்களுடன் வந்து, வீட்டில் திருட நோட்டமிட்டுவுள்ளனர்.

அப்போது வீட்டில் பேன் சத்தம் கேட்டதையறிந்த திருடர்கள் தப்பி சென்று உள்ளனர். அத்தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் நேற்று காலை  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதித்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

அதுப் போன்று நீடாமங்கலம் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் திருட்டுப் போவதையறிந்தும், இரவு  நேரத்தில் பயங்கர ஆயுதங்களோடு காரில் முகமூடியணிந்தும் வீடுகளை  திருடர்கள் நோட்டமிட்டு செல்வதால் அப் பகுதி வாழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

எனவே திருட்டுகளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமித்து இரவு ரோந்து பணியினை மும்முரப்படுத்த வேண்டும் என்றனர்.

நீடாமங்கலம் நகரில் குற்றச்செயல்களை தடுத்திட கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டுமென வணிகர் சங்கத்தினரும் மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here