மன்னார்குடி, டிச. 16 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் ராஜகோபால சுவாமி ரத்தினகிரீட அலங்காரத்தில் முற்ற வெளியில் பகல்பத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது பெருமாளின் முன்பு ஒவ்வொரு ஆழ்வார்கள் வலம் வரும்போது, ஒவ்வொரு ஆழ்வார்களுக்கும் அவர்களுக்கு உரிய தனி நடை, தனி இசை பின்பற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கோவில் யானை செங்கமலம் சாமரம் வீசியபடி பெருமாளை மூன்று முறை வலம் வந்து வணங்கியது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.