கும்பகோணம், டிச. 15 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து எதிர் வரும் 19 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறும் என்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் செயலால் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டியதால் கும்பகோணம் மாநகரப் பகுதியில் காவல்துறையினர் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியாது.
சென்னை கன்னியாகுமரி தொழிற்திட சாலை திட்டத்தின் கீழ் காரைக்கால் சாலையில் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த கோரியும், பணியின் பெயர் என்ன ஒப்பந்த நிறுவனத்தின் பெயர் என்ன மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு மதிப்பிட்டு எண் என்ன போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பலகை அமைக்கப் படாததின் மர்மம் என்ன மேலும் தரமற்ற பணியாட்கள் கொண்டு அவசர கதியில் அரசு பணத்தை விரயமாக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் பணி ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய கோரியும் எதிர் வரும் டிச 19 – 2023 ஆம் தேதி காரைக்கால் சாலையில் நெடுஞ்சாலை துறையினைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நெடுஞ்சாலை துறையின் சார்பில் அக்கட்டத்தை நேற்று கட்டி முடித்து திறப்பு விழா நடத்திட திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏற்கனவே அக்ட்சியின் சார்பில் அறிவிக்கப் பட்ட தேதியினை மாற்றி நேற்று சாலைமறியல் போராட்டத்தினை நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. அத்தகவல் அறிந்து ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் அதன் பொருள் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாரதி, தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட நிர்வாக குழு ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மகளிர் அணி பொறுப்பாளர் வாசுகி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காரைக்கால் சாலையில் அக்கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டத்திற்காக தொண்டர்களை அழைத்திடும் பணியில் அக்கட்சியினர் ஈடுப்பட்டதால், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..