கும்பகோணம், டிச. 13 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் மேலும் அரசு இப்பிரச்சினையில் அலட்சியப் போக்கினை கடைப் பிடித்தால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. மேலும் இப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த கழிப்பறை மிகவும் பழுதடைந்து இருந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய கழிப்பறை கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அந்த கழிப்பறையை கடந்த ஆறு மாதங்கள் முன்பு இடித்துவிட்டு 15 வது நிதி குழு மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஆறு மாத கழிப்பறை வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் பலமுறை தெரிவித்தும் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. என அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கழிப்பறை வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று பெற்றோர்களிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போது உள்ள கழிப்பறை வசதி  சுகாதாரத் கோடாக உள்ளது. அதில் மாணவர்கள் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.  உடனே அசூர் ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் கழிப்பறை வசதி செய்து தரவில்லை என்றால் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தொடர்ந்து பள்ளியின் முன்பு அனைத்து மக்களை ஒன்றுத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் இப்பிரச்சினைக் குறித்து அவ்வூராட்சி மன்ற தலைவர் ஆனந்தி சிவம் செயல், மற்றும் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் கழிப்பறை வசதி உள்ளது. என்றும் புதிய கழிப்பறை வசதி செய்து தரக்கோரி இரண்டு கிராம சபை கூட்டங்களில் கோரிக்கை மனு அளித்ததாகவும் தெரிவித்தனர்.

பேட்டி – பள்ளிப்பிள்ளைகளின் பெற்றோர் கலைவாணி மற்றும் பலர் அசூர் ஊராட்சி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here