மீஞ்சூர், நவ. 27 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்  ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், காணியம்பாக்கம்  ஜெகதீசன், பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், தன்ராஜ், ஜெயலட்சுமி தன்ராஜ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலு வரவேற்று உரே நிகழ்த்தினார். இதில் திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் கோதண்டம் , மணிமாறன் ,மோகன், கதிரவன் ,கம்யூனிஸ்டு கதிர்வேலு, மீஞ்சூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here