மீஞ்சூர், நவ. 25 –

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகுச் சிறப்பாக அப்பகுதியில் கொண்டாடுவதென விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 27ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கட்சியின் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக  செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜனின் அறிவுறுத்தலின் படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அக் கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வல்லூரில் அமைந்துள்ள ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார், ஒன்றிய நிர்வாகிகள் இளைஞர் அணி தமிழரசன், தசரதன், தாஸ் , சிறுவாக்கம் இந்திரா சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா.து.தமிழரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்,

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆரணி வழக்கறிஞர் அன்புவாணன் கலந்து கொண்டு கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ் அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது, மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் அடங்கிய 15 ஊராட்சிகளில் உள்ள திமுக கொடி கம்பத்தில் புதியக் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அப்பகுதிகளில் உள்ள நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் எனவும், ஏழை எளியோர்களுக்கு நல திட்ட உதவிகளை சிறப்பாக செய்திட வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள்  அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here