கும்பகோணம், ஆக. 30 –

கும்பகோணம் மாநகரில் இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, இந்திய வள்ளூவர் கூட்டமைப்பு சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும், ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை சார்ந்து வரும் அவிட்ட நட்சட்த்திர நாளில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இவ்விரதத்தை கடைப் பிடிக்கின்றனர்.

ரிக், யஜூர் வேதங்களை படிக்கும் பிராமணர்கள் இத்தேதியில் பழையப் பூணூலை களைந்து விட்டு புதிய மாற்றிக் கொள்கின்றனர். அதுப்போன்று சாமவேதம் படிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்து வருகிறது.

மேலும் ஆவணி அவிட்ட நாளில் அந்நிகழ்வு, ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையும் உள்ளது.

முன்னோர்களின் வழிபாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என அழைக்கப்படுகிறது.

ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது அவர்களுக்கான ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு வள்ளுவ குல அந்தணர்கள் சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி கும்பகோணம் மாநகரில் உள்ள வீர சைவ மடத்தில் நடைபெற்றது.

விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்ட அந்நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு நூற்றுக்கு மேற்பட்ட அந்தணர்கள் ஒரே நேரத்தில் பூணூல் அணிந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் வள்ளுவர் குல அந்தணர்கள் மாநிலத் தலைவர் பரசுராமன், மாநில பொதுச் செயலாளர் முருகன், மாநில கெளரவத் தலைவர் ஈஸ்வர ராஜலிங்கம், மாநில அவைத்தலைவர் சுவாமி, மாநில தலைமை சட்ட ஆலோசனை சதாசிவம், மாநிலத் துணைத் தலைவர் வரதராஜன், மாநில கவுரவத் தலைவர் வள்ளுவ நாயனார், திருவள்ளுவர் சைவ சித்தாந்த  குல குரு ஆதீனம் செல்லதுரை நாயனார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அந்நிகழ்வில் உரை நிகழ்த்திய வி.பி.என். பாடசாலையின் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் தெரிவிக்கும் போது, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் எனவும், நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் எனவும், உறுதியிட்டு தான் சொல்வதாக அப்போது அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here